Breaking News

திறன் அடிப்படையில் சம்பளம்? ஏழாவது மத்திய சம்பளக் கமிஷன் பரிந்துரை


ஏழாவது மத்திய சம்பளக் கமிஷன், மத்திய அரசின் அனைத்து பிரிவு ஊழியர்களுக்கும், திறன் அடிப்படையிலான சம்பளம் வழங்க பரிந்துரைத்துள்ளது. ஏழாவது மத்திய சம்பளக் கமிஷன் அளித்த பரிந்துரைகள் விவரம்:

மத்திய அரசின் அனைத்து பிரிவு ஊழியர்களுக்கும் திறன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட வேண்டும். அவர்களின் செயலாற்றல், வகுக்கப்பட்ட வரையறைக்கு உட்படவில்லை எனில், வருடாந்திர ஊதிய உயர்வு அளிக்கக் கூடாது. சிறந்த செயலாற்றலுக்கான அளவீட்டை, 'நன்று' என்பதில் இருந்து, 'மிக நன்று' என உயர்த்த வேண்டும்.

பணியில் சேர்ந்த, 20 ஆண்டுக்குள், நிர்ணயிக்கப்பட்ட திறன் அளவீட்டை எட்ட முடியாத அரசு ஊழியர்களுக்கு, வருடாந்திர ஊதிய உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும். திறன் மேம்படாத ஊழியர்கள், தாமாக முன்வந்து பணியிலிருந்து விலகிக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.