பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் வாழ்த்து அட்டைகளை அனுப்பலாம் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி மோடிக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில் பள்ளி மாணவர்கள் தங்கள் கைகளால் உருவாக்கிய வாழ்த்து அட்டைகளை "கமலாலயம், 19, வைத்தியராமன் தெரு, தியாகராய நகர், சென்னை-17' என்ற முகவரிக்கு வரும் செப்டம்பர் 14-ஆம் தேதிக்குள் அனுப்பலாம்.
இதில் சிறந்த படைப்புகள் கண்காட்சிக்கு வைக்கப்படுவதுடன், பரிசுகளும் வழங்கப்படும். மிகச் சிறந்த வாழ்த்து அட்டைகள், தமிழக பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைக்கப்படும்.
கல்லூரி மாணவர்களும் தங்கள் வாழ்த்துக்களை "wishourpm@gmail.com' என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.