Breaking News

இயற்கை வைத்தியம் - தொடர் தும்மலை கட்டுப்படுத்த சில வழிமுறைகள்

* பப்ளிமாசு பழங்களை எடுத்து நறுக்கி அதனுடன் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்றாக காய்ச்சி சிறிது தேன் கலந்து காலை, மாலை குடித்து வந்தால் தும்மல் குறையும்.
* ஒரு கைப்பிடி அளவு ரோஜா இதழ்களை எடுத்து அரை டம்ளர் தண்ணீர் விட்டுச் சுண்டக் காய்ச்சி அந்தத் தண்ணீரை வடிகட்டி, அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தை அரைத்து போட்டு அந்த நீரை ஒரு சுத்தமான துணியில் நனைத்து முகர்ந்து கொண்டு இருந்தால் அடிக்கடி வரும் தும்மல் குறையும்.
* பரட்டைக் கீரை சாறில் திப்பிலியை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தேனில் நான்கு சிட்டிகை அளவு குழைத்துச் சாப்பிட்டால் தும்மல் குறையும்.
* துளசி, தூதுவளை, கண்டங்கத்திரி ஆகியவற்றின் இலை சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டால் தும்மல் குறையும்.

* ஆடாதோடை இலை, தூதுவளை, துளசி இலை இவைகளை வெயிலில் உலர்த்திப் பொடியாக்கி வைத்துக்கொண்டு 1 ஸ்பூன் பொடியில் தேன் கலந்து தினமும் காலை, மாலை வேளைகளில் சாப்பிட தும்மல் குறையும்.
* முசுமுசுக்கை இலையை சுத்தம் செய்து அரைத்து தட்டி தோசை மாவில் கலந்து தோசை செய்து காலை நேரம் சாப்பிட இடை விடாத தும்மல் குணமாகும்.
* 1 கிராம் சித்தரத்தை பொடியை அரை லிட்டர் பாலை கால் லிட்டர் பாலாக கட்டியாக காய்ச்சி 2 வேளை குடித்து வந்தால் தும்மல் குறையும்.
* தூதுவளை இலையை நன்கு காய வைத்து மிளகையும் சேர்த்து நன்கு பொடியாக்கி அந்த பொடியை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் தும்மல் குறையும்.
* தூதுவளை பொடி, மிளகு பொடி, தேன் அல்லது பாலில் கலந்து குடிக்க தும்மல் நிற்கும்.
* சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு சேர்த்து பொடியாக்கி இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் இடைவிடாத தும்மல் குணமாகும்.
* இரண்டு தேக்கரண்டி அகத்திகீரை சாறுடன் இரண்டு தேக்கரண்டி அகத்தி பூ சாறை கலந்து, அந்த கலவையுடன் சிறிது தேன் கலந்து தினமும் காலை உணவருந்துவதற்கு முன் சாப்பிடவும்.