Breaking News

உன் உரிமையைப் பெற நீ போராடித்தான் ஆகவேண்டும்! போராட்டமே வெற்றியை தேடித் தரும்!


வாழ்க்கையில் நாம் எப்படிச் சோதனைகளை எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து அவை தோல்வியாகவோ அல்லது வெற்றியாகவோ அமையலாம். ஆனால் முயற்சி இல்லாமல் வெற்றி வருவதில்லை. நமது அக்டோபர் 8, வேலைநிறுத்தப் போரட்டமும் அப்படித்தான்
ஒரு உயிரியல் ஆசிரியர் தனது மாணவர்களுக்கு ஒரு கம்பளிப் புழு எப்படி வண்ணத்துப் பூச்சியாக மாறுகிறது என்று சொல்லிக் கொண்டு இருந்தார். அவர் தனது மாணவர்களிடம் ஒரு வண்ணத்துப் பூச்சி கூட்டினைக் காட்டி அடுத்த ஒரு சில மணி நேரங்களில் வண்ணத்துப் பூச்சி தனது கூட்டிலிருந்து போராடி வெளிவரப்போகிறது என்றும் ஆனால் யாரும் அதற்கு உதவக்கூடாது என்றும் கூறிவிட்டு வெளியே சென்று விட்டார்.

மாணவர்களில் ஒருவன் அதன் மேல் இரக்கப்பட்டான். தனது ஆசிரியரின் சொல்லை மீறி, அந்த வண்ணத்துப் பூச்சி தனது கூட்டிலிருந்து வெளிவர உதவுவதற்குத் தீர்மானித்தான். அந்த வண்ணத்துப் பூச்சி போராட தேவையின்றி எளிதாக வெளியே வரும் பொருட்டு அந்தக் கூட்டை உடைத்தான். ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு வண்ணத்துப் பூச்சியும் இறந்து விட்டது.
இப்பொழுது அந்த மாணவன் வண்ணத்துப் பூச்சியின் இறப்பிற்கு காரணமாகி விட்டான். கூட்டிலிருந்து வெளிவரப் போராடும் போராட்டம் உண்மையில் அதனுடைய சிறகுகளை வளர்க்கவும், தன்னை பலப்படுத்திக் கொள்ளவும் உதவும் என்பது தான் இயற்கையின் சட்டம். மாணவன் அந்த வண்ணத்துப் பூச்சியயை போராட்டத்தில் இருந்து காப்பாற்றி விட்டதால், அது இறந்து விட்டது. இதே கொள்கையை நமது வாழ்விற்கும் பயன்படுத்துங்கள். போராட்டங்கள் இல்லாமல் வாழ்வில் எதுவுமே பயன்தராது.