Breaking News

தேர்வு நேரத்தில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கு கண்டனம்


தேர்வு நேரத்தில் எஸ்.எஸ்.ஏ சார்பில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதால் மாணவர்களின் கல்வி பாதிப்புக்குளாகி வருவதாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது.


1-ஆம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, 19-ஆம் தேதி முதல் பருவத் தேர்வு தொடங்குகிறது. தேர்வு சார்ந்த பயிற்சிகளை மாணவர்களுக்குத் தர வேண்டிய சூழலில், ஆசிரியர்கள் பயிற்சிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.ஏ. சார்பில் கணித உபகரணப் பயிற்சி, 9, 10, 11-ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது.  இப்பயிற்சி இரண்டாம் கட்டமாக, 14, 15, 16-ஆம் தேதிகளில் நடத்தப்படவுள்ளது. இதேபோல், அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15, 16, 18-ஆம் தேதிகளிலும், ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15-ஆம் தேதியும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தேர்வு நெருங்கி வரும் நிலையில் பள்ளிகளில் இருந்து ஏராளமான ஆசிரியர்கள் பயிற்சிக்குச் சென்று விடுகின்றனர். இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கிறது.

எஸ்.எஸ்.ஏ., சார்பில் ஆண்டுக்கு, 20 நாள்கள் தர வேண்டிய பயிற்சியை ஒரே சமயத்தில் பருவத் தேர்வு நேரத்தில் அவசரமாக அளிப்பது கேள்விக்குறியாக உள்ளது