பி.எட்., படிப்பு மாணவர் சேர்க்கைக்கான, 'கட் - ஆப்' மற்றும் தனிப்பட்ட மதிப்பெண் விவரங்கள், முதல்முறையாக, ஆன் - லைனில் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும், 21 கல்வியியல் கல்லுாரிகளில், மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வை, லேடி வெலிங்டன் கல்லுாரி நடத்துகிறது.
மொத்தமுள்ள, 1,750 இடங்களுக்கு, 7,440 பேர் விண்ணப்பித்துள்ளனர்; இவர்களில், 1,130 பேர் பி.இ., - பி.டெக்., பட்டதாரிகள். பி.எட்., படிக்க விண்ணப்பித்து உள்ளவர்களுக்கான, 'கட் - ஆப்' விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வரும், 28 முதல் அக்டோபர், 5ம் தேதி வரை நடக்கும், கலந்தாய்வு விவரங்களும், கல்லுாரி இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும், 21 கல்வியியல் கல்லுாரிகளில், மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வை, லேடி வெலிங்டன் கல்லுாரி நடத்துகிறது.
இந்த ஆண்டு முதன்முறையாக, http://www.ladywillingdoniase.com என்ற இணைய தளத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களின் தனிப்பட்ட, 'கட் - ஆப்' விவரங்களை பார்க்கும் வகையில், தனியாக இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. http://61.8.146.180/ladywillingdon/default.Aspx என்ற இணைப்பில், விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்ப எண்ணைப் பதிவு செய்தால், மதிப்பெண்ணை காணலாம்.