பாப்பாரப்பட்டியில் பள்ளி மாணவியை அடித்த ஆசிரியை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வித்துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் திவிஜா. இவர் பாப்பாரப்பட்டியில் உள்ள அரசு மே ல் நிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் உடல் நலம் தொடர்பாக கடந்த 15-ஆம் தேதி 7 நாள்கள் விடுப்பு எடுத்தாராம். பின்னர் மீண்டும் பள்ளிக்கு சென்றபோது, பள்ளி ஆசிரியை ஜெயலட்சுமி மாணவி பள்ளி விடுப்பு எடுத்ததை கண்டித்து பிரம்பால் அடித்தாராம். இதனால் கை விரல்களில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து, மாணவியின் பெற்றோர் மாவட்ட முதன்மை கல்வி அலுவகத்தில்
அளித்த புகாரின் பேரில், மாவட்டக் கல்வி அலுவலர் ஆர்.நடராஜன் பள்ளிக்கு
நேரில் சென்று சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து, பள்ளியில் மேற்கொண்ட விசாரணை தொடர்பான அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுலவரிடம் அளிக்கப்பட்டது.
இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி கூறியது: பள்ளி மாணவியை ஆசிரியை அடித்தது தொடர்பான புகாரின் பேரில் மேற்கொண்ட விசாரணையில், ஆசிரியை மாணவியின் கைகளில் பிரம்பால் அடித்தது தெரியவந்தது. இதனால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார்.