மும்பை: விண்வெளியில் உள்ள சிறிய கிரகத்திற்கு, இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டரும், முன்னாள் உலக செஸ் சாம்பியனுமான, விஸ்வநாதன் ஆனந்த் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சூரிய குடும்பத்தில், செவ்வாய் மற்றும் ஜூபிடர் கிரகங்களின் சுற்றுவட்ட பாதையில், ஏராளமான விண்கற்கள் சுற்றி வருகின்றன. ஒழுங்கற்ற வடிவிலான இந்த கற்களை, குட்டி கிரகங்கள் என்றும் அழைக்கின்றனர். இந்த வகையில், ஜப்பானை சேர்ந்த, கென்சோ சுசூகி என்ற வானியல் அறிஞர், கடந்த, 1988ம் ஆண்டு, அக்., 10ம் தேதி, 4538 என்ற குட்டி கிரகத்தை கண்டுபிடித்தார். வழக்கமாக, கண்டுபிடிப்பாளர் பெயர் தான், கிரகத்திற்கு சூட்டப்படும். அதே சமயம், 10 ஆண்டுகளாக பெயர் சூட்டாமல் இருந்ததால், சர்வதேச வானியற்பியல் கழகம் (ஐ.ஏ.யு.,), தனக்கு விருப்பமான பெயரை சூட்டலாம். இதன்படி, 4538 என்ற குட்டி கிரகத்திற்கு, 10 ஆண்டுகளாக பெயரிடப்படாமல் இருந்ததால், அதற்கு செஸ் வீரர் விஸ்வ நாதன் ஆனந்தை போற்றும் வகையில், 'விஷ்யானந்த்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது
நன்றி- குருகுலம்