கல்வித்துறை நியமனங்கள் காவியமாக்கப்படவில்லை என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். லோக்சபாவில் மனிதவள மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்த போது அதற்கு பதிலளித்து பேசுகையில் இவ்வாறு கூறினார்.
இந்திய வரலாற்று ஆராய்ச்சிக்குழுவில் இந்துத்துவக் கொள்கைகளை கொண்டவர்களை மத்திய அரசு நியமித்துள்ளதாக காங்கிரசை சேர்ந்த சுஷ்மிதா தேவ், திரிணமூல் காங்கிரசை சேர்ந்த சுகதா போஸ் உள்ளிட்ட உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில் ஸ்மிருதி இரானி பேசுகையில், அரசியலமைப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டே கல்வி முறைகளை பரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். அதையே தான் நான் மீண்டும் இங்கே கூற விரும்புகிறேன். கல்வித்துறை காவிமயமாக்கப்படவில்லை. ஐ.மு. கூட்டணி அரசு, கல்வித்துறைக்கு செலவிட்ட தொகையை விட இன்னும் அதிகமாகவே பா.ஜ.க., அரசு செலவிட்டு வருவதாக ஸ்மிருதி இரானி பேசினார்