தகுதிவாய்ந்த
ஆதிதிராவிடர், பழங்குடியின, மதம் மாறிய தலித் மாணவர்களிடம் கல்விக்
கட்டணத்தைச் செலுத்துமாறு வற்புறுத்தக் கூடாது என சுயநிதி
பொறியியல்கல்லூரிகளை தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம்
அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அந்த மாணவர்களுக்குத் தேர்வு அனுமதிச் சீட்டை வழங்கி, தேர்வை அவர்கள்சிறப்பான முறையில் எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்குமாறும் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அனைத்து சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கும் தொழில்நுட்ப கல்வி ஆணையர் பிரவீண்குமார் அனுப்பியுள்ள கடித விவரம்:அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய தலித் மாணவர்களுக்கு பராமரிப்புப் படி, கல்விக் கட்டணங்களை அரசே வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் 2014-15 ஆம் ஆண்டுக்கும் நிதி ஒதுக்கீடு செய்து, இணையதளம் மூலம் மின்னணு தீர்வை (இசிஎஸ்)முறையில் வழங்கப்பட்டுவிட்டது.தகுதிவாய்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியின, மதம் மாறிய தலித் மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு வற்புறுத்தக் கூடாது என்பதோடு, அவர்களுக்குதேர்வு அனுமதிச் சீட்டை வழங்கி தேர்வெழுத அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.