மேல்நிலைப் பள்ளிகளில் இரு பருவமுறை தேர்வுகள் அமல்படுத்த வேண்டும்'' என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் மணிவாசகம் வலியுறுத்தினார். மதுரையில் மாநில பொதுக்குழு இதில் மணிவாசகம் பேசியதாவது:
கல்வித் துறையில் தற்போது ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை நடைமுறையில் உள்ளது. பத்தாம் வகுப்பிலும் இம்முறை பின்பற்றப்பட உள்ளது. ஆனால், பிளஸ் 1, பிளஸ் 2வில் அனைத்து பாடங்களையும் படித்து மாணவர்கள்
தேர்வு எழுதுவதாக உள்ளது. இதனால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக பிளஸ் 1, பிளஸ் 2விலும் இரு பருவமுறை தேர்வு முறை அமல்படுத்த வேண்டும்.கடந்தாண்டு ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சிலிங்கில் பல்வேறு இடங்கள் மறைக்கப்பட்டன. நடப்பாண்டில் கோடை விடுமுறைக்குள் கவுன்சிலிங் நடத்தி முடிக்க வேண்டும். பணியிடங்கள் வெளிப்படையாக அறிவித்து, அரசியல் தலையீடுக்கு அடிபணியாமல் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.