Breaking News

ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு: நுழைவுத் தேர்வு அறிவிப்பு


ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு: நுழைவுத் தேர்வு அறிவிப்பு
ஒருங்கிணைந்த 4 ஆண்டுகள் பி.எஸ்ஸி., பி.எட்., பி.ஏ.,பி.எட். படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 7-ஆம் தேதி இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
பள்ளி ஆசிரியர் பணிக்குச் செல்ல விரும்பும் மாணவர்கள் பிளஸ்-2 முடித்தவுடன் நேரடியாக இந்தப் படிப்புகளில் சேர்ந்து ஆசிரியர் பணிக்கான தகுதியைப் பெற முடியும்.
இந்தப் படிப்புகள் (தென் மண்டல பகுதியினருக்கு) கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள மத்திய அரசின் மண்டல கல்வி நிறுவனத்தில் (ஆர்.ஐ.இ.) மட்டுமே வழங்கப்படுகின்றன.
பொது நுழைவுத் தேர்வு அடிப்படையிலேயே இந்தப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 2015-16 கல்வியாண்டுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்குwww.rieajmer.raj.nic.in என்ற இணையதளத்தில் ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்-லைனில் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய மே 11 கடைசித் தேதியாகும். தேர்வறை அனுமதிச் சீட்டை மே 14-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம். நுழைவுத் தேர்வு ஜூன் 7-ஆம் தேதி நடத்தப்படும். தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது