Breaking News

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நியமனத்திற்கான கலந்தாய்வு முதன்மை கல்வி அலுவலகங்களில் நாளை நடக்கிறது

பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

         உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட 652 கணினி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டனர். பின்னர் அந்த பட்டியல் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டன. தேர்வு செய்யப்பட்ட தேர்வாளர்களுக்கு நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக (ஆன்லைன் மூலம் கலந்தாய்வு)அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் அமைந்துள்ள கலந்தாய்வு மையத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் நடைபெறவுள்ளது. 

          ஆசிரியர்களாக நியமிக்க தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்கள் முகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்டத்தில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும். மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு, தேர்ச்சிபெற்றமைக்கான சான்று, அசல் கல்வி சான்றிதழ்கள், சாதிச்சான்று மற்றும் இதர ஆவணங்களுடன் வரவேண்டும்.

இவ்வாறு பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.