Breaking News

கேள்வித்தாள் விவகாரம் ,- அவசரப்பட்ட' தலைமை ஆசிரியை'சஸ்பெண்ட்' செய்து அரசு உத்தரவு

 ரோடு:பவானி பள்ளியில் முன்கூட்டியே கேள்வித்தாள் வழங்கிய விவகாரத்தில், தலைமை ஆசிரியையை, 'சஸ்பெண்ட்' செய்து, மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்

ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சி, காமராஜ் நகரில் நகரவை நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. தலைமை ஆசிரியையாக கிருஷ்ணகுமாரி பணியாற்றுகிறார்.

இவர் தமிழ் ஆசிரியையாகவும் உள்ளார்.இரு தினங்களுக்கு முன், ஒன்று முதல், 8-ம் வகுப்பு வரை முதல் பருவத்தேர்வு துவங்கியது. 6, 8-ம் வகுப்பு மாணவ - -மாணவியர் தேர்வு எழுத வந்திருந்தனர்.கேள்வித்தாள்கள் அதிகாரிகளின் அறிவுறுத்தல்படி, காலை, 9:30 மணிக்கு பள்ளிக்கு எடுத்து வரப்பட்டன. பின், 10:00 மணிக்கு தேர்வு துவங்க வேண்டும்.ஆனால், காலை, 9:45 மணிக்கே, தலைமை ஆசிரியை கிருஷ்ணகுமாரி தேர்வுத்தாள் உறையை பிரித்து, மாணவ, -மாணவியருக்கு வழங்கி படிக்கும்படி கூறியுள்ளார். தொடர்ந்து, 10:45 மணிக்கு முறையாக தேர்வு நடத்தாமல், மாணவ, மாணவியரை கும்பலாக உட்கார வைத்து, ஒருவரை ஒருவர் பார்த்து எழுத வைத்துள்ளார்.அதுமட்டுமின்றி, மதியம் நடந்த, 7-ம் வகுப்பு தேர்விலும், கேள்வித்தாளை எடுத்து மாணவ - -மாணவியருக்கு வழங்கி படிக்க கூறியுள்ளார்.மாவட்ட கல்வி அலுவலர் ராமசாமி கூறியதாவது:தலைமை ஆசிரியை கிருஷ்ணகுமாரி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளார். சஸ்பெண்ட் உத்தரவு திரும்ப பெற்றவுடன், மாணவ - மாணவியர் குறைந்த எண்ணிக்கையில் உள்ள பள்ளிக்கு, அவர் பணியிட மாற்றம் செய்யப்படுவார்.இவ்வாறு அவர் கூறினார்.