Breaking News
கேள்வித்தாள் விவகாரம் ,- அவசரப்பட்ட' தலைமை ஆசிரியை'சஸ்பெண்ட்' செய்து அரசு உத்தரவு
ஈரோடு:பவானி பள்ளியில் முன்கூட்டியே கேள்வித்தாள் வழங்கிய விவகாரத்தில், தலைமை ஆசிரியையை, 'சஸ்பெண்ட்' செய்து, மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்
ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சி, காமராஜ் நகரில் நகரவை நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. தலைமை ஆசிரியையாக கிருஷ்ணகுமாரி பணியாற்றுகிறார்.
மாணவர்களின் காலண்டுத் தேர்வு மதிப்பெண் விவரங்களை EMIS தளத்தில் எவ்வாறு பதிவு செய்வது? -- VIDEO
ஒவ்வொரு வகுப்பு ஆசிரியரும் தங்கள் வகுப்பில் உள்ள மாணவர்களின் காலண்டுத் தேர்வு மதிப்பெண் விவரங்களை EMIS தளத்தில் தங்களுக்கான individual user id & password பயன்படுத்தி Academic Scores பகுதியில் பதிவு செய்ய வேண்டும்.
அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
காலாண்டுத் தேர்வு முடிவுற்று அளிக்கப்படவேண்டிய விடுமுறை குறித்து கீழ்கண்டவாறு அறிவுரைகள் முதன்மைக் கல்வி அலுவலர் , மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது . காலாண்டுத் தேர்வு முடிந்தவுடன் 01.10.2022 முதல் 05.10.2022 வரை முதல் பருவ விடுமுறை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது .
விடியல் கிடைக்குமா? தவிக்கும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் – சிறப்பு கட்டுரை -
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கங்களை சேர்ந்த ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பகுதி நேர ஆசிரியர்கள் 60 வயது வரை பணியாற்றலாம் என்ற அறிவித்தார். இந்த அறிவிப்பானது, கடந்த 10 ஆண்டுகாலமாக பணிசெய்து வரும் பகுதிநேர ஆசிரியர்களான எங்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஆசிரியர்கள் சஸ்பெண்ட் - ரத்து செய்யக்கோரி மாணவர்கள் சாலை மறியல் - DSP, DEO பேச்சுவார்த்தை
இன்று காலை சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர், சஸ்பெண்ட் மற்றும் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீது தவறு இல்லை. அவர்களை திரும்ப பள்ளியில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் எனக்கூறி பள்ளியை முற்றுகையிட்டு வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
பள்ளி கல்வி துறை பணியாளர்களுக்கு இன்று முதல் கலந்தாய்வு
பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குனர் சுற்றறிக்கை:
ஜூன் 1 நிலவரப்படி, மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும், மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்களுக்கு, முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் கலந்தாய்வு நடத்தப்படும்.நிதிக் காப்பாளர், மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் மாவட்டத்திற்குள் மாறுதல் பெற,27ம் தேதி; நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர் மற்றும் பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர், மாவட்டம் விட்டு மாவட்டம் விருப்ப மாறுதல் பெற, செப்.,28ல் கலந்தாய்வுநடத்தப்படும்.காணாமல் போன காலாண்டு தேர்வு வினாத்தாள்கள்.. தனியார் செல்போன் கடையில் குவிந்த ஆசிரியர்கள்..
- கொடைக்கானல் மலை கிராமங்களுக்கு செல்ல வேண்டிய வினாத்தாள்கள், வத்தலக்குண்டில் உள்ள ஒரு தனியார் செல்போன் கடையில் கொடுக்கப்பட்டு அந்தந்த பகுதியில் உள்ள ஆசிரியர்களை எடுத்துச் சொல்லுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
மாணவர்களை ஈர்க்கும் 25 அடி உயர பிரமாண்ட 'புத்தக சிற்பம்'
மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழா விமர்சையாக தொடங்கி இருக்கிறது.
பாடம் நடத்தாமல் மெத்தனம் அரசுப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சஸ்பெண்ட்
சேலம் அடுத்த எருமாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராக செந்தில்குமார் உள்ளார். இவர் பாடம் நடத்தாமல் மெத்தனமாக இருந்ததாக புகார் எழுந்தது. பள்ளிக்கு நேரடியாக சென்ற சிஇஓ முருகன் விசாரணை நடத்தி செந்தில்குமாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி தேதிகள் மாற்றம் - Change in dates of numeracy and literacy training for teachers
(கனிவான கவனத்திற்கு: எண்ணும் எழுத்தும்-2 தொடர்பான அனைத்து ஆசிரியர்களுக்கும் - EEM கட்டம்-2 இன் 06.10.2022 முதல் 08.10.2022 வரை வழங்கப்பட இருந்த வட்டார அளவிலான பயிற்சி தேதி 10.10.2022 முதல் 12.10.2022 வரை ஒத்திவைக்கப்பட்டது. இது சம்மந்தப்பட்ட தகவலை வட்டார அளவிலான அனைவருக்கும் தவறாமல் தெரிவிக்க வேண்டும். மாற்றத்திற்கான இயக்குநரின் செயல்முறைகள் எதிர்பார்க்கப்படுகின்றது) செய்தி....
அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு சார்ந்த வழிகாட்டுதல்களில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினராக தொடர இயலாத உறுப்பினருக்களுக்குப் பதிலாக புதிய உறுப்பினர் தெரிவு செய்தல், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் பங்கு பெறுதல் மற்றும் மாணவர்களின் உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை - 600 006 மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
ந.க.எண். 2223/07/பமேகு,/ஒபக,2022 நாள்: .08.2022
பொருள்: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அனைத்து அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு சார்ந்த வழிகாட்டுதல்களில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினராக தொடர இயலாத உறுப்பினருக்களுக்குப் பதிலாக புதிய உறுப்பினர் தெரிவு செய்தல், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் பங்கு பெறுதல் மற்றும் மாணவர்களின் உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்து
மாணவர்கள் கண்முன்னே பள்ளி தலைமையாசிரியர் தாக்குதல்
திருப்பூர் மாவட்டம், அவிநாசி பேரூராட்சி, 17வது வார்டு, கைகாட்டிபுதுாரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு, 59 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். பள்ளி அருகே வசிப்பவர்கள்பள்ளி வளாகத்துக்குள் குப்பையை கொட்டுகின்றனர் என்ற புகார் நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது.
ஆப்சென்ட்' ஆனவர்கள் தேர்வில் 'பாஸ்--- அதிர்ச்சிி
மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக்கல்வியில் 858 மாணவர்கள் பெயரில் போலி 'டிடி'யை பெற்று சான்றிதழ் வழங்கியது, தேர்ச்சி அடையாத, தேர்வுக்கு வராத மாணவர்களை 'பாஸ்' செய்தது உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன் உட்பட 8 பேர் மீது லஞ்சஒழிப்பு போலீசார் 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
போக்சோ சட்டத்தில் பழிவாங்கப்படும் ஆசிரியர்கள் - ஆணையர், அமைச்சர் தலையிட கோரிக்கை!
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் கிறிஸ்துதாஸ். வகுப்பறையில் மாணவ, மாணவிகளிடம் ஆபாசமாக பேசினார் என்ற புகாரின் பேரில் சமீபத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இரு மாணவிகள் நேரடியாக வந்து புகார் அளித்ததன் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம்’: குஜராத்தில் கேஜரிவால் வாக்குறுதி
‘பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம்’: குஜராத்தில் கேஜரிவால் வாக்குறுதி - 'Let's implement the old pension scheme': Kejriwal's promise in Gujarat
குஜராத்தில் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்.
இந்தாண்டு இறுதியில் குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜகவை எதிர்த்து ஆம் ஆத்மி, காங்கிரஸ் நேரடியாக போட்டியிடவுள்ளது.
தில்லியை தொடர்ந்து பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி, பிற மாநிலங்களிலும் கால் பதிக்கும் முனைப்பில் குஜராத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குஜராத்தில் பல கட்டங்களாக பிரசாரத்தை மேற்கொண்டு வரும் கேஜரிவால், வதோதராவில் இன்று பேசியதாவது:
“குஜராத்தில் பல நாள்களாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
பஞ்சாபில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், குஜராத்தில் ஆட்சி அமைத்த சில நாள்களிலேயே அமல்படுத்துவோம்.
நாங்கள் பணவீக்கத்தை ஒழித்து, மருத்துவமனைகள், பள்ளிகள் கட்டுவோம் என்றும், மின்சாரத்தை குறைந்த விலையில் கொடுப்போம் என்றும் வாக்குறுதி அளிக்கிறோம்.
பாஜக மீது பரிதாபப்படுகிறேன். பாஜகவை போன்று உபயோகம் இல்லாத கட்சியை ஒருபோதும் நான் பார்த்ததில்லை.
இந்த கட்சிகள் 75 ஆண்டுகளில் செய்யாததை பகவந்த் மான் வெறும் 6 மாதங்களில் செய்துள்ளார்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக குஜராத்தில் பிரசாரம் மேற்கொண்ட கேஜரிவால் வேளாண் கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்.
02.10.2022 கிராம சபைக் கூட்டம் - தலைமை ஆசிரியர்ககளுக்கு பள்ளிக் கல்வித்துறை புது உத்தரவு
அக்.2-ல் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் எனவும், பள்ளி வளர்ச்சிக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் பள்ளி கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது
அரசுப் பள்ளி மாணவிகள் மோதல் - ஒரு வளாகத்தில் இரு பள்ளிகளை ஒருங்கிணைத்ததால் பிரச்னை
கட்டிட பழுது காரணமாக புதுவையில் இரு பள்ளிகளை ஒருங்கிணைத்து வகுப்பு நடந்து வந்த நிலையில், இன்று காலை அரசு பள்ளியில் இரு பள்ளி மாணவிகளுக்குள் திடீர் மோதல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் மாணவிகளை சமாதானப்படுத்தினார். புதுச்சேரி குருசுகுப்பத்தில் என்கேசி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளில் 130 மாணவிகள் பயின்று வருகின்றனர். புதுவை புஸ்சி வீதி - செஞ்சி சாலை சந்திப்பில் இயங்கி வந்த சுப்பிரமணிய பாரதி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் பிளஸ்2 வகுப்புகளில் மொத்தம் 550 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் கட்டிடம் பழுதடைந்த நிலையில், கல்விக் கற்க மாணவிகளுக்கு இடையூறாக இருந்தது.
தமிழ்நாடு தொடக்க்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு மூலம் நியமனம் - 01012022 நிலவரப்படி வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு 31122008 க்கு முன்னர் பணியில் சேர்ந்து பணிபுரியும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் இறுதி தகுதிவாய்ந்தோர் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டது - வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டது உரிமைவிடல் செய்ய விருப்பம் உள்ளவர்களிடம் உரிமைவிடல் கடிதம் பெற்று அனுப்புமாறு கோருதல் தொடர்பாக.
போக்சோ வழக்குப்பதிவு - ஆசிரியை தற்கொலை
திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் குணசேகரன். இவர் அப்பகுதியில் கண்ணாடி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி லில்லி(32). இவர் உப்பிலியபுரம் அருகே உள்ள நெட்டவேலம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு திருமணம் முடிந்து 12 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.
காலாண்டு தேர்வில் புதிய மாற்றங்கள்; பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
காலாண்டு தேர்வில் புதிய மாற்றங்கள்; பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
காலாண்டு தேர்வில் பள்ளியளவில் நடத்திக்கொள்ளலாம் என புதிய மாற்றங்களை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
01.08.2022 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!
01.08.2022 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!
"சனிக்கிழமைகளிலும் வகுப்புகள்" - காலை, மாலை வேலைகளில் சிறப்பு வகுப்புகள் - கல்வித்துறை திடீர் அறிவிப்பு
பள்ளி மேலாண்மைக் குழு கூட்ட தீர்மானங்களை கிராமசபை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டு விவாதிப்பது தொடர்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை 600 006 மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.2223/C7/Jமேகு ஒபக:2022 நாள்: 09.2022 பொருள்: பள்ளி மேலாண்மைக் குழு கூட்ட தீர்மானங்களை கிராம சபை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டு விவாதிப்பது தொடர்பான வழிகாட்டுதல்கள் சார்பு
அரசாணை 101 மற்றும் 108 ஆகியவை. ரத்தால் நடைபெறப் போகும் மாற்றங்கள் என்னென்ன ஒரு பார்வை.*
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுயநிதி பள்ளிகளுக்கு என மெட்ரிக் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் நியமிக்கப்பட உள்ளனர்