Breaking News

பி.எட்., செய்முறை தேர்வு கண்காணிப்புக்கு கட்டுப்பாடு


'மூன்று ஆண்டு அனுபவம் உடைய ஆசிரியர்கள் மட்டுமே, பி.எட்., செய்முறை தேர்வு கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படுவர்' என, ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்துள்ளது.
ஆசிரியர் கல்வியான பி.எட்., படிப்பில், 2015ல், புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஓராண்டு படிப்பு, இரண்டாண்டுகளாக மாற்றப்பட்டு உள்ளது. முதலாம் ஆண்டுக்கு எழுத்து தேர்வு, வினாத்தாள் முறை மற்றும் மதிப்பீட்டு முறையில், பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதேபோல, செய்முறை தேர்விலும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. 50 சதவீதமாக வழங்கப்பட்ட செய்முறை மதிப்பெண், 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. புதிய முறைப்படி, ஜூலை, 22 முதல், செய்முறை தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், செய்முறை தேர்வு கண்காணிப்பாளராக, ஆசிரியர்களை நியமனம் செய்வதிலும் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டு உள்ளது. மூன்றாண்டுகள் அனுபவம் இல்லாத ஆசிரியரை, கண்காணிப்பாளராக நியமிக்க முடியாது என, பல்கலை நிபந்தனை விதித்துள்ளது.
அதன்படி, மூன்றாண்டுக்கு மேல் அனுபவம் கொண்ட பேராசிரியர் பட்டியலை அனுப்ப,கல்லுாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.