Breaking News

மின்வாரிய உதவிப்பொறியாளர் எழுத்து தேர்வு மதிப்பெண் வெளியீடு


மின்வாரிய உதவிப் பொறியாளர் எழுத்துத் தேர்வின் மதிப்பெண்கள் ெவளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி 31ம் தேதி 375 உதவிப் பொறியாளர்கள் (சிவில்/ மெக்கானிக்கல் /எலக்ட்ரிக்கல்) பதவிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வாயிலாக நடத்தப்பட்ட எழுத்து தேர்வின் மதிப்பெண்கள் நேற்று மாலை வெளியிடப்பட்டது. தேர்வர்கள் அவர்களுடைய  மதிப்பெண்களை www.tangedco.gov.in இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். இந்த முடிவுகள் சென்னை உயர் நீதிமன்ற ஆணையின்படி வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் சென்னை உயர் நீதிமன்ற இறுதி ஆணை பெறப்பட்ட பின் தமிழக அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இன, இட, ஒதுக்கீட்டின் அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தின் அடிப்படையில் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். நேர்முக தேர்விற்கு பிறகு, எழுத்து தேர்விற்கு 85 சதவீதமும், நேர்முக தேர்விற்கு 15 சதவீதமும் (10 மதிப்பெண் நேர்காணலுக்கும், 5 மதிப்பெண் கல்வித் தகுதியின் மதிப்பெண் சதவீதம்) கணக்கீடு செய்து இறுதியாக இன, இட சுழற்சி முறையை பின்பற்றி நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழ்நாடு மின்வாரியம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.