Breaking News

செப்டம்பர் 30 வரை சிறப்புத் தொடர் அனுமதியில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: இயக்குநர் உத்தரவு


அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையும், பிளஸ் 1 வகுப்பிலும் சிறப்புத் தொடர் அனுமதி மூலம் செப்டம்பர் 30 வரை மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்திலுள்ள அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 9-ஆம் வகுப்பு வகுப்புகளிலும், பிளஸ் 1 வகுப்பிலும் நிகழ் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்த மாணவர் சேர்க்கை, ஜூலை 31-ஆம் தேதி வரை வழக்கம் போல் நடைபெறும். அதன் பிறகு ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 30 வரை சிறப்புத் தொடர் அனுமதி மூலம் மாணவர் சேர்க்கை நடத்தலாம்.

இந்தத் தகவலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும் தெரிவிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.