Breaking News

தொடக்கப் பள்ளிகளில் A B L எனப்படும் செயல் வழிக் கற்றல் முறை பயனளிக்கிறதா?


இன்று திட்டத்தை ஆதரித்தும் எதிர்த்தும் பல குரல்கள் எழுந்துள்ளன. ஒரு ஆரோக்கியமான விவாதம் தேவை. பெரும்பாலான ஆசிரியர் சங்கங்கள் செயல்வழிக் கல்வியைக் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டாலும், ஆசிரியர் பற்றாக்குறை போன்ற அதன் அடிப்படைத் தேவைகளைத் தீர்க்காமல் திட்டத்தைத் தொடரக் கூடாது என்கின்றன. சங்கங்கள் பொத்தாம் பொதுவாக எதிர்க்காமல் திட்டத்தின் அடிப்படைகளையும் நுணுக்கங்களையும் குறித்து, அறிவுபூர்வமாக, அனுபவபூர்வமாகப் பரந்த ஆய்வும் விவாதமும் நடத்தி, தங்கள் ஆலோசனைகளை ஏற்க அரசை வற்புறுத்த வேண்டும்.

திறந்த மனத்துடன், விமர்சனங்களை ஏற்று, தேவையான மாற்றங்களைச் செய்யும் மனப்போக்கும் முதிர்ச்சியும் கல்வித் துறைக்குத் தேவை. மேலிருந்து திணிக்கும் திட்டங்கள் வெற்றிபெற வாய்ப்பில்லை. அனைத்து வகைப்பட்ட பள்ளிகளிலும் இத்திட்டம் கொண்டுவரப்பட வேண்டும். பெரும் ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த அமைப்பில், வசதியற்ற குழந்தைகளைக் கொடுமையான புறக்கணிப்புக்கு உள்ளாக்கியிருக்கும் அமைப்பில், இதன் மூலம் இடைவெளிகள் இன்னும் அதிகரிக்கும் என்ற அச்சம் தவிர்க்கப்பட வேண்டும். நீண்ட காலமாகக் கல்வி அமைப்பைச் சீரழித்துக்கொண்டிருக்கும் பல்வகைப் பள்ளிகள், ஆசிரியர் பற்றாக்குறை, சமுதாயப் பங்கேற்பின்மை போன்ற பிரச்சினைகளைத் தொடாமல் போதனாமுறை மாற்றத்தினால் மட்டும் முன்னேற்றம் காண இயலாது.
அனைத்திற்கும் மேலாக போதனாமுறையும் வகுப்பறைக் கலாச்சாரமும் ஆசிரியரின் சுதந்திரத்தில், திறமையில், படைப்பாற்றலில், அனுபவ முதிர்ச்சியில், பொறுப்புணர்வில் வேர் கொண்டவை. இவை அனைத்தும் மதிக்கப்படும் சூழலில் ஆசிரியர் தம் வகுப்பறை தமக்கே உரியதெனச் சொந்தம் கொண்டாடித் தனது மாணவரின் திறமையில் தன் வாழ்வின் அர்த்தத்தைக் காண்பார். அந்தச் சூழலை உருவாக்கக் கல்வித் துறை முயல வேண்டும்.
இவை அனைத்தும் மேற்கொள்ளப்பட்டால், தமிழ் நாட்டின் அனைத்துக் குழந்தைகளும் ஆர்வத்துடன் கற்று, கற்றல் திறன்களை அடைவார்கள். அனைத்துப் பயனாளிகளும் பங்கும் பொறுப்பும் ஏற்கும் அற்புதமான மாற்றம் உருவாகும் என்று நம்பலாம்

கற்றல் ஏணிப்படி வரிசையில் உள்ளவாறு செயல்வழி கற்றல் அட்டைகளையே பாடப் புத்தகமாக வழங்கினால் , மாணவர்கள் படிக்க எளிதாக இருக்கும் .
ஏனென்றால் ஒவ்வொரு மாணவன் கையிலும் கற்றல் அட்டை இருப்பதால் பன்முறை படித்து பயிற்சி பெறவும் , மீள் பார்வைக்கும் , வீட்டில் படிக
்கவும் எதுவாக இருக்கும் .
கற்றல் அட்டைகளை பயன்படுத்தி மட்டும் தான் கற்க வேண்டிய நிலை தொடருமாயின் , தேக்க நிலை தான் காணப்படும் .
ஆசிரியருக்கும் பலவழிகளில் சிரமம் ஏற்படும் .
பெற்றோருக்கும் இந்தமுறை பற்றி தெளிவாக தெரியாத காரணத்தால் பள்ளி கற்பித்தல் முறை பற்றி அதிருப்தி ஏற்படக் கூடும் .


நன்றி- Asiriyar Kural