Breaking News

அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் , அ.க.இ. & கல்வித்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு


27.05.2015 புதன்கிழமையன்று அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் திரு.மா.இராஜ்குமார், மாநிலச் செயலாளர் திரு.த.வாசுதேவன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மாநிலத் திட்ட இயக்குநர் திருமதி.பூஜா குல்கர்னி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் திரு.கண்ணப்பன், பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)  திரு.கருப்பசாமி, ஆகியோரை நேரில் சந்தித்து நமது கோரிக்கைகளை முன் வைத்தனர்.


மாநிலத் திட்ட இயக்குநர், இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) ஆகியோர் தெரிவித்த செய்திகள்:

1 . தற்போதைய பணிப் பளு, ஆள் பற்றாக்குறையின் காரணமாக தற்போது முதற்கட்டமாக் 500 ஆசிரியர் பயிற்றுநர்கள் மட்டுமே பள்ளிக்கு பணிமாற்றம் செய்யப்படுவார்கள்.

2.  தற்போது பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் நடைபெற்ற பின்னர் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பள்ளி கலந்தாய்வு நடைபெறும். 

3. பள்ளிக்கு பணிமாறுதல் கலந்தாய்வு நடக்கும்போது 1 : 2 விகிதத்தில் பாட வாரியாக தரம் அடிப்படையில் ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவர்.

4. விரைவில் 819 புதிய பணியிடங்களுக்கு டெட் தகுதி பெற்ற நபர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டு புதிய பயிற்றுநர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

5. புதிய பணியிடங்களை நிரப்பும் முன்பு 819 (தோற்றுவிக்கப்படுபவை) + 500 (பள்ளிக்கு பணி மாறுபவர்களின் காலிப்பணியிடம்) = 1319 பணியிடங்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். இக்கலந்தாய்வில் வெளி மாவட்டங்களுக்கு பணிநிரவலில் சென்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

6.நிலையான பயணப்படி ரூ.1000 /-க்கு அதிகமாக வழங்கப்படும்.
         
மாநிலத் தலைவர்