Breaking News

ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் : ஜி.கே.வாசன்


ஆசிரியர்களின் தொடர் போராட்டம் குறித்து இன்று கருத்து தெரிவித்த தமிழ் மாநில காங்கிரஸ் மாநில தலைவர் திரு.ஜி.கே.வாசன் அவர்கள் கூறியதாவது:  அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நீண்டகால கோரிக்கையை வலியுறுத்தி 3 நாளாக போராடி வருகின்றனர். ஆசிரியர்களின் தொடர் போராட்டத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்.
எனவே மாணவர்களின் படிப்பை கருத்தில் கொண்டு ஆசிரியர் பிரதிநிதிகளுடன், பள்ளிக்கல்வி அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி, ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தனது அறிக்கையில் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.