Breaking News

ஆசிரியர்கள் ஸ்டிரைக்; பிளஸ் 2 தேர்வு பாதிக்கும் அபாயம்?

பிளஸ் 2 தேர்வு நெருங்கும் நிலையில், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், இன்று முதல், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால், பொதுத் தேர்வு பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பானஜாக்டோ நிர்வாகிகளுடன்,அமைச்சர்கள் குழு பேச்சு நடத்தியதுஆனால்எந்த உறுதியும் அளிக்கவில்லை. எனவேஜாக்டோவில் உள்ள ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணிநேற்று முதல்காலவரையற்ற போராட்டத்தை துவக்கினர். முதல் நாளில்25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை எனஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலர் பாலசந்தர் தெரிவித்தார்.

இந்நிலையில்முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும்இன்று முதல்ஸ்டிரைக்கில் ஈடுபடுவர் என,முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் சுரேஷ் அறிவித்துள்ளார்.போராட்டம் அறிவித்துள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தான்பிளஸ் 2 பாடம் நடத்துகின்றனர்தேர்வு கண்காணிப்பு,மேற்பார்வைவிடைத்தாள் திருத்தம் போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். இவர்களின் போராட்டம்,செய்முறைத் தேர்வையும்பொதுத் தேர்வையும் நேரடியாக பாதிக்கும் எனகூறப்படுகிறது.
ஹால் டிக்கெட்
இன்று முதல்மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நிலையில்மார்ச்4 முதல் பொதுத் தேர்வு எழுத உள்ள பிளஸ் 2 மாணவர்களுக்குபிப்.,22 முதல்ஹால் டிக்கெட் வழங்கப்படும் எனகல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில்ஏழு லட்சம் மாணவமாணவியர் பங்கேற்கின்றனர். தேர்வுக்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மாணவர்களின் பெயர் விவரங்கள் திருத்தம் செய்யப்பட்டு,இறுதிப் பட்டியலைஅந்தந்த பள்ளிகளுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதேபோல்மாணவர்களின் ஹால் டிக்கெட்இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
கவலை
அனைத்து பள்ளிகளுக்கும் பிப்.20 முதல்ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு பிப்.22 முதல்27க்குள் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என,கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுத் தேர்வுக்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில்மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் போராட்ட அறிவிப்பால்தேர்வு நடைபெறுவதில் சிக்கல் ஏற்படுமோ எனமாணவர்களும்பெற்றோரும் கவலை அடைந்துள்ளனர்