Breaking News

அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க அரசு முடிவு: 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு


  • குடும்ப நல ஒய்வூதியம் 3 லட்சம்
  • கெளரவ விரிவுரையார் சம்பளம் 15000
  • சத்துணவு ஊழியர் ஒய்வூதியம் 1500
  • 110 விதியில் முதல்வர் அறிவிப்பு
  • குடும்ப நல காப்பீட்டுத்தொகை உதவி 150000/- லிருந்து 200000/- உயர்வு.
  • அரசு பணிகள் பொது அரசாணைமூலம் மமுறைப்படுத்தப்படும்.
  • சத்துணவு ஓய்வூதியம் 1500/- உயர்வுசமையல் உதவியாளர் பணப்பயன் ஓய்வின்போது 25000/-
  • நிர்வாக தீர்ப்பாயம் மீண்டும் செயல்படுத்த முடிவு.
  • பழைய ஓய்வூதியத்தை செயல்புடுத்த புதிய வல்லுனர் குழு.
  • கிராம செவிலியர்க்கு துறை செவிலியராக பதவிவுயர்வு.
  • கௌரவ விரிவுரையாளர்களுக்கு சம்பலம்15000
  • மருத்துவக்கலூரி பேராசிரியர்களுக்கு பதவியுயர்வு.
  • பதவி உயர்வு பெற்றுள்ள பதவி உயர்வு பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு கணக்கு தேர்வில் விளக்கு.
  • அரசு மருத்துவக்கல்லூரி இணை பேராசிரியர்கள் 157 பேர் பேராசிரியர்களாக பதவி உயர்வு 
  • அரசு அலுவலர்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க மீண்டும் நிர்வாக தீர்ப்பாயம் ஏற்படுத்தப்படும்.
  • கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்று பணி வரன்முறை முடித்தவர்களுக்கு ஊதிய உயர்வு.

அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க தமிழக அரசு முடிவு எடுத்திருப்பதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110இன் கீழ் அறிவிப்புக்களை வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதா,அரச ஊழியர்கள் நலனில் எப்போதும் தமிழகஅரசுக்கு அக்கறை இருப்பதாக தெரிவித்தார்.

அரச ஊழியர்களின் குடும்ப நல உதவி 1.50 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்த்தப்படுவதாக தெரிவித்த முதல்வர், இதன் காரணமாக தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ 20 கோடி செலவு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.சத்துணவு ஊழியர்களின் ஓய்வூதியம் 1000 ரூபாயில் இருந்து 1 500 ரூபாயாக உயர்த்தப்படும் எனவும்,இதன் மூலம் 86 813 சத்துணவு ஊழியர்கள் பயன் பெறுவார்கள் எனவும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியம் 10,000 ரூபாயில் இருந்து 15,000ரூபாயாக உயர்த்தப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.
இது இவ்வாறு இருக்க கடந்த 10 நாட்களாக 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில்,முதல்வரின் இந்த அறிவிப்பு மிக முக்கியம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.