மத்திய அரசின்கீழ் செயல்படும், தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (என்.எச்.எப்.டி.சி.,) மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உதவித்தொகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எண்ணிக்கை: 2,500. இதில் 30 சதவீத உதவித்தொகை மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழிற்கல்வியில், இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பில் பயின்று கொண்டிருக்க வேண்டும்.
உதவித்தொகை: இளநிலை பயிலும் தொழிற்கல்வி மாணவர்களுக்கு மாதம் ரூ.2,500ம் மற்றும் புத்தகம்/ஸ்டேஷனரிக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். முதுநிலை பயிலும் தொழிற்கல்வி மாணவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் மற்றும் புத்தகம்/ஸ்டேஷனரிக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
குறிப்பு: பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 30
மேலும் விவரங்களுக்கு: www.nhfdc.nic.in