Breaking News

வீரமரணம் தழுவினார் "ஹனுமந்தப்பா"

siachen, siachen Hanumanthappa, siachen avalanche, siachen survivor, siachen miracle, siachen news, siachen soldier, Lance Naik Hanumanthappa, nation news

 சியாச்சின் ஹீரோவுக்கு சல்யூட்: வீரமரணம் தழுவினார் "ஹனுமந்தப்பா"

மைனஸ் 45 டிகிரி வெப்பம், பனிக்கு கீழே 35 அடி ஆழம், ஆறு நாட்கள் என கற்பனை செய்து கூட பார்க்க முடியாத, மோசமான பருவநிலையில் சிக்கி, மீண்ட இந்திய ராணுவ வீரர் ஹனுமந்தப்பா, டாக்டர்களின் கடும் போராட்டத்திற்குப் பின் மரணத்தைத் தழுவினார்.


பாகிஸ்தான் எல்லையோரம் சியாச்சின் பனி மலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 10 இந்திய ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கினர். கடந்த 3ம் தேதி இந்த சம்பவம் நடந்தது. மீட்புப் பணியின் போது, கர்நாடகாவை சேர்ந்த ஹனுமந்தா மட்டும் உயிருக்கு போராடி கொண்டிருந்தார், உறை பனியில் 6 நாட்கள் போராடிய ஹனுமந்தப்பாவை மீட்டு ராணுவ ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இவரது மன உறுதி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். என டில்லி ராணுவ மருத்துவமனை டாக்டர்கள் போராடினர். ஆனால் அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது.


அவர் நேற்று முதல் கோமா நிலைக்கு தள்ளப்பட்டார் . இந்நிலையில் இவரது உடல் இன்று காலை 11.45 மணியளவில் பிரிந்தது . சியாச்சின் ஹீரோ ஹனுமந்தப்பா காலமானதை அடுத்து அவரது இழப்பு, நாடு முழுவதும் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.