Breaking News

தேசிய விடுமுறை தினமாக நேதாஜி பிறந்த நாள்: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு


இந்திய தேசிய ராணுவத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளை, தேசிய விடுமுறை தினமாக அறிவிக்குமாறு 
உத்தரவிடக் கோரிய மனு குறித்து, 8 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.இதுதொடர்பாக, பொதுநல வழக்குகளுக்கான தமிழ்நாடு மையத்தின் நிர்வாக அறங்காவலர் கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், 


நேதாஜியின் தியாகங்களைக் கருத்தில் கொண்டு அவருக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும், அவருக்கு மணிமண்டமும், அவரது வாழ்க்கை வரலாறு குறித்தஅருங்காட்சியகத்தை புது தில்லியிலும், மாநில தலைநகரங்களிலும் அமைக்கவும், அவரது பிறந்த தினத்தை தேசிய விடுமுறை தினமாகவும் அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இதுகுறித்து 8 வாரங்களுக்குள் மத்திய அரசு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.விமலா ஆகியோர் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டனர்