Breaking News

மத்திய அரசு நிறுவனங்களில் வாய்ப்புகள்



மத்திய அரசின் கீழ் செயல்படும் பல்வேறு நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,)வெளியிட்டுள்ளது.
பணியிடங்கள்: சீனியர் சயின்டிபிக் ஆபிசர் (மெக்கானிக்கல்), பேராசிரியர் ( சிவில் இன்ஜினியரிங்), உதவி பேராசிரியர் (தகவல் தொழில்நுட்பம், சிவில், மெக்கானிக்கல்)

வயது வரம்பு: சீனியர் சயின்டிபிக் ஆபிசர் பணிக்கு 35 வயதுக்கு மிகாமலும், மற்ற அனைத்து பணிகளுக்கும் 50 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
கல்வித் தகுதி: மெக்கானிக்கல், சிவில், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறை சார்ந்த பாடப் பிரிவில் பணிக்குரிய கல்வித்தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 17
மேலும் விவரங்களுக்கு: www.upsconline.nic.in