லாவா லாம்ப் எனப்படும் அலங்கார விளக்கை பலர் பார்த்திருக்கலாம். வெப்பசலன அடிப்படையில் மின்சாரத்தில் இயங்கும் அவ்விளக்கின் மாதிரியை வீட்டில் இருக்கும் பொருள்களைக கொண்டு செய்யும் முறையை இங்கு காண்போமா ?!
தேவையான பொருட்கள்:
- கண்ணாடி குவளை அல்லது சிறிய பாட்டில்
- சமையல் எண்ணெய்
- நீரில் கரையக்கூடிய வண்ணம் (ஃபுட் கலர்)
- வெளிநாட்டில் வசிப்பவர்கள் ALKA – SELTZER மாத்திரை இந்தியாவில் வசிப்பர்களானால் Histac or Pepfiz எனப்படும் ஏதோ ஒரு மாத்திரை.
எச்சரிக்கை: இம்மாத்திரையை பெரியவர்கள் துனையுடன் வாங்கவும். இது ஆபத்தான மாத்திரை இல்லாவிட்டாலும் சிறியவர்களிடம் இருப்பு இல்லாதவாறு பார்த்துக்கொள்ளல்வேண்டும்.
செய்முறை:
1. கண்ணாடி குவளையில் பாதி அளவு சமையல் எண்ணெயை ஊற்றவும்
பிறகு தண்ணீரை ஊற்றவும்
அதில் சில சொட்டுக்கள் வாடர் கலரை விடவும்
மேலே சொன்ன மாத்திரைகளில் ஏதோ ஒன்றை எடுத்துக்கொள்ளவும்
அதை நான்காக உடைத்துக்கொள்ளவும்
ஒரு துண்டை குவளையில் போடவும்
வண்ணமயமான குமிழ்கள் மேலெழுந்து செல்லும் அழகை காணவும். குமிழ்கள் நின்று விட்டால் அடுத்த மாத்திரை துண்டை போடவும்.
நன்றி - Learning science by doing
நன்றி - Learning science by doing