Breaking News

இன்று சுனாமி நினைவு தினம் (26.12.2014)

 பத்து ஆண்டுகளுக்கு முன் இந்தோனேசியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் பலியாகக் காரணமாகிய சுனாமி பேரலை உருவாகியதன் நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. சுனாமி என்பது ஜப்பானிய மொழிச் சொல். "துறைமுக அலை' எனப்பொருள். "ஆழிப்பேரலை' எனவும் அழைக்கப்படுகிறது.

2004 டிச., 26ம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 30 கி.மீ., ஆழத்தில், ரிக்டர் அளவில் 9.1 என்ற அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. இதையடுத்து எழும்பிய ஆழிப்பேரலைகள் இந்தோனேசியா, இந்தியா<, மியான்மர், சிங்கப்பூர்,
இலங்கை, தாய்லாந்து உட்பட 14 நாடுகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இது உலகின் மோசமான இயற்கை சீரழிவுகளில் 6வது இடம் என்ற சோகமான சாதனையை பெற்றது. உயிர் சேதத்துடன், கோடிக்கணக்கான ரூபாய்க்கு பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியது. அதற்கு முன் "சுனாமி' என்ற வார்த்தையை இந்தியாவில் யாரும் கேள்விப்பட்டதே இல்லை. "கடல் அலை' கோபம் கொண்டு ஊருக்குள் வந்த போது தான் தெரிந்தது. இதுதான் சுனாமி என்று. இதன் கோபமோ வெறும் பத்து நிமிடம் தான். அது ஏற்படுத்திய சோகம் மக்கள் மனதில் இருந்து என்றுமே அழியப்போவதில்லை