Breaking News

வரலாற்று சுவடுகள்- பென்னி குயிக்



                                             பென்னி குயிக் - ஓர் அதிசய பிறவி



முல்லைப் பெரியாறு அணையை ரூ75 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 1893-ம் ஆண்டு கட்டும் பணி தொடங்கப் பட்டது. அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு மிருகங்கள், கடும் மழை போன்ற இடையூறுகளை சமாளித்து அணையை கட்டிக்கொண்டிருந்த பொழுது தொடர் மழை காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் பாதி கட்டப்பட்டிருந்த அணை அடித்துச் செல்லப்பட்டது. இதனால் பெரிதும் மனமுடைந்தார் பென்னி குயிக். உடைந்த அணையை மீண்டும் கட்ட நிதி ஒதுக்க ஆங்கில அரசு மறுத்துவிட்டது. இதனால் சிறிதும் மனம் தளராத பென்னி குயிக் இங்கிலாந்துக்கு திரும்பிச் சென்று அவரின் குடும்ப சொத்துக்கள் அனைத்தையும் விற்று கிடைத்த பணத்தில் முல்லை பெரியாறு அணையை கட்டி முடித்தார்.



வீட்டில் இருந்த கட்டிலைக் கூட அவர் விடவில்லை, அதையும் விற்றார். தனது மனைவியின் நகைகளையெல்லாம் விற்றார். அந்தக் காலத்தில் இருந்த பல்வேறு பெரும்ப பணக்காரர்களிடம் கையேந்தி நிதி சேகரித்தார்.
தனக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத பூமியில், தனக்கு சற்றும் தொடர்பே இல்லாதவர்களாக இருந்தாலும், மக்கள் வறட்சியில் வாடக் கூடாது, அவர்கள் தண்ணீரின்றி தவிக்கக் கூடாது, காய்ந்து கருகிப் போன தென் தமிழக வயல்களெல்லாம் பூத்துக் குலுங்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு இப்படி மெனக்கெட்டார்.
 பென்னிகுயிக். முல்லைப் பெரியாறு அணையை 1895ம் ஆண்டில் அவர் கட்டி முடித்தார்.

தான் பிறக்காத தேசம் .தான் வளராத ஊரு. தன்னுடைய தாய் நாடும் அல்ல. பின் யாருக்காக  இதை செய்தாய்? எங்களுக்குள்ளே தண்ணீருக்கு  சண்டையிட்டுக் கொண்டிருக்க ,எங்கிருந்தோ வந்து எங்களின் வாழ்விற்கு வளம் சேர்த்த நீர் எங்கள் தேசத் தலைவர் தான்.