Breaking News

அரசு நர்சிங் பள்ளிகளில் 100 இடங்களுக்கு அனுமதி

வரும் ஆண்டில் அனைத்து அரசு நர்சிங் பள்ளிகளிலும் தலா 100 மாணவிகளை சேர்த்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் 23 அரசு நர்சிங் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 11 பள்ளிகளில் 50 இடங்கள், மற்ற பள்ளிகளில் 60 முதல் 90 இடங்கள் 

அனுமதிக்கப்பட்டிருந்தன. தேவை காரணமாக சென்னை, மதுரை உள்ளிட்ட நர்சிங் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலான மாணவிகள் சேர்க்கப்பட்டு வந்தனர். உபரியாக சேர்க்கப்பட்ட மாணவிகளை திடீரென தமிழக நர்சிங் கவுன்சிலும், இந்திய நர்சிங் கவுன்சிலும் பதிவுசெய்ய மறுத்து விட்டன. தமிழக அரசின் முயற்சியால் தற்போது அவர்களை நர்சிங் கவுன்சில் பதிவு செய்துள்ளது. இந்த பிரச்னையை தவிர்க்க 2015 ஆண்டு முதல் திண்டுக்கல்லை தவிர்த்து 22 நர்சிங் பள்ளிகளிலும் 100 மாணவிகளை சேர்த்து கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 'தேவையான கட்டட வசதி ஏற்படுத்திய பின் திண்டுக்கல் நர்சிங் பள்ளியிலும் 2016 முதல் 100 மாணவிகளை சேர்க்கப்படுவர்' என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்