Breaking News

652 கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம் டிச.24ல் சான்றிதழ் சரிபார்ப்பு துவக்கம்

தமிழகத்தில் 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வரும்24ம் தேதி தொடங்குகிறது. மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை, சேலம் ஆகிய 5 இடங்களில் இப்பணி நடக்கிறது.தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 652 கணினி ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.


இதற்கு பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பிசிஏ, பிஎஸ்சி (இன்பர்மேஷன் டெக்னாலஜி) படித்து பிஎட் பட்டப்படிப்பு முடித்தவர்கள் பட்டதாரி கம்ப்யூட்டர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.இந்த காலியிடங்கள் அனைத்தும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. இதற்காக மாநில அளவிலான சீனியாரிட்டி பட்டியல் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தயாரிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் வரும் 24ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்க்கும் பணி துவங்குவதாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. சான்றிதழ் சரிபார்க்கும் தேதி, பங்கேற்கும் மாவட்டங்கள், நடக்கும் இடம் விவரம் வருமாறு:டிச.24ம் தேதி முதல் 26ம் தேதி வரை: நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு & அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வள்ளுவர் சிலை எதிரில் சேலம்.டிச.24ம் தேதி முதல் 26ம் தேதி வரை: புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு & இ.ஆர்.மேல்நிலைப்பள்ளி,அண்ணா சாலை எதிரில், திருச்சி.

டிச.24ம் தேதி முதல் 26ம் தேதி வரை: 

வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு & ஜெயகோபால் கரோடியா தேசிய மேல்நிலைப்பள்ளி, பாரத மாதா தெரு, கிழக்கு தாம்பரம் (சானடோரியம் ஸ்டேஷன் எதிரில்), சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம்.டிச.29ம் தேதி மற்றும் 30ம் தேதி: கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு & ஒசிபிஎம் மேல்நிலைப்பள்ளி, தல்லாகுளம், மதுரை.டிச.29ம் தேதி மற்றும் 30ம் தேதி & விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு & அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவிக தெரு, காந்தி சிலை எதிரில், விழுப்புரம்.டிச.29ம் தேதி மற்றும் 30ம் தேதி & தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு & அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேலம்.சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் அதற்கான அழைப்புக் கடிதம், சான்றிதழ் சரிபார்க்கும் இடம், நாள் உள்ளிட்ட விவரங்களுடன் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதில் இருந்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

நெல்லை புறக்கணிப்பு

மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை என வரிசை யாக சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் நிலையில் மேற்கு மண்டலத்தை சேர்ந்தவர்களுக்குசேலத்தில் சான்றிதழ் சரிபார்க்கப்படுகிறது. தென் மாவட்டத்தினருக்குநெல்லையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவது வழக்கம். ஆனால், இந்த முறை நெல்லை புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லை, தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்டத்தினர் மதுரை செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது.