Breaking News

Flash News:பிளஸ் டூ தேர்வில் அதிரடி மாற்றம்


பிளஸ் டூ பொதுத்தேர்வு முறையில் அதிரடி மாற்றம் கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 11,12 ம் வகுப்பு பாடதிட்டத்திலும்
மாற்றம் கொண்டு வர விரைவில் அரசாணை வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
* பிளஸ் டூ தேர்வில் 1200-க்கு பதிலாக மொத்த மதிப்பெண் 600-ஆக குறைகிறது.
* பிளஸ் டூ தேர்வு எழுதும் நேரம் 3 மணியில் இருந்து 2.30 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
* பாடவாரியாக 100 மதிப்பெண் கேள்வியில் 90 மதிப்பெண் கேள்வி பாடத்திலிருந்து வரும், 10 மதிப்பெண் கேள்வி மாணவர் செயல்திறன் தொடர்புடையதாக இருக்கும்
* நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் அப்ஜெக்டிவ் முறை கேள்விகளும் இடம் பெறுகிறது

* பிளஸ் ஒன், பிளஸ் டூ வகுப்புகளை ஒருங்கிணைத்து ஒரே சான்றிதழாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.