Breaking News

கல்வி அமைச்சரின் அறிவிப்புக்கு மாறாக புத்தக கட்டு சுமந்த ஆசிரியர்கள்

 'இலவசங்களை அரசே வினியோகிக்கும்' என, அமைச்சர்
செங்கோட்டையன் கூறிய நிலையில், மீண்டும் ஆசிரியர்களையே புத்தகத்தை சுமக்க வைத்துள்ளனர்.
 தமிழகத்தில், 2011 முதல், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 14 இலவச திட்டங்கள் மூலம், பாடப் புத்தகம், நோட்டு புத்தகம், வண்ண பென்சில்கள் போன்றவை, பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் மூலம் வினியோகிக்கப்படும். விடுமுறை காலத்தில், ஆசிரியர்கள் புத்தக கட்டுகளை சுமந்து செல்வது வழக்கம்.
'இந்த முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். 'இந்த ஆண்டே, இலவச திட்டங்களுக்காக, ஆசிரியர்களை அழைக்க மாட்டோம்' என, அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

ஆனால், அமைச்சரின் அறிவிப்புக்கு மாறாக, இலவச திட்டங்களை வினியோகிக்க, அனைத்து பள்ளிகளில் இருந்தும், ஆசிரியர்கள் அழைக்கப்பட்டனர். அதனால், விடுமுறையில் இருந்த ஆசிரியர்கள், முக்கிய பள்ளிகளுக்கு வந்து, புத்தக கட்டுகளை சுமந்து செல்லும் பணியில் திடீரென ஈடுபடுத்தப்பட்டதால், அதிர்ச்சி அடைந்தனர்.