Breaking News

400 வங்கி அதிகாரி காலியிடங்கள் கடைசி நாள் : 2016 டிச., 28.

பொதுத்துறை வங்கிகளில் முக்கியமான சிண்டிகேட் வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. கோர் பேங்கிங் உள்ளிட்ட நவீனமய சேவைகளைக் கொண்ட இந்த வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பிரிவில் காலியாக உள்ள 400 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் நேரடியாக இல்லாமல் ஓராண்டு சிறப்பு படிப்பு முடிக்க வேண்டும். இதற்காக மணிப்பூர் ஸ்கூல் ஆப் பேங்கிங் என்ற கல்வி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இக்கல்வி நிறுவனத்தில் Post Graduate Diploma in Banking and Finance (PGDBF) என்ற ஓராண்டு படிப்பு முடிக்க வேண்டும். இதனை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு PGDBF என்ற சான்றிதழை அக்கல்வி நிறுவனம் வழங்கும். இந்த சான்றிதழ் பெற்றவர்கள் நேரடியாக சிண்டிகேட் வங்கியில் புரொபேஷனரி அதிகாரி ஆக பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவர். வயது : இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.10.2016 அடிப்படையில் 20 முதல் 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 02.10.1988க்கு பின்பும், 1.10.1996க்கு முன்பும் பிறந்தவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயதில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மற்றும் மாற்றுத் திறனாளிகள் பிரிவினருக்கு சலுகைகள் உள்ளன.கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.தேர்ச்சி முறை : ஆன்லைன் முறையிலான எழுத்துத் தேர்வு, குழுவிவாதம் மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். எழுத்து தேர்வு 2017 பிப்., 26ம் தேதி நடைபெறும். விண்ணப்பக் கட்டணம் : சிண்டிகேட் வங்கியின் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.600/-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை டெபிட்/கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் வாயிலாக ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் கிடைக்கும் பிரிண்ட் அவுட்டை எடுத்து பத்திரப்படுத்தவும்.கடைசி நாள் : 2016 டிச., 28.விபரங்களுக்கு : www.syndicatebank.in