Breaking News

தேர்ச்சி குறைந்த பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்த உத்தரவு


ஒவ்வொரு கல்வியாண்டிலும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்துவர். அந்தந்த பள்ளிகளுக்கான ஆய்வு தேதிகளை, அதிகாரிகள் முன்கூட்டியே தெரிவித்து விடுவதால், பள்ளிகளில் தயார் நிலையில் இருப்பர். 'இந்த ஆண்டு, முன் அறிவிப்பின்றி திடீர் ஆய்வு நடத்த வேண்டும்' என, தொடக்கப் பள்ளி இயக்குனர் இளங்கோவன்

உத்தரவிட்டுள்ளார்.உதவி தொடக்கக் கல்வி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளான, ஏ.இ.இ.ஓ., மற்றும் டி.இ.ஓ., குழுவினர், புகார் வரும் பள்ளிகளிலும், மாணவர் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளிலும் திடீர் ஆய்வு நடத்தவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.பல மாவட்டங்களில், உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளின் மோசமான செயல்பாடுகளே, கல்வித்தரம் உயராததற்கு காரணம் என குற்றச்சாட்டு உள்ளது