Breaking News

10-ம் வகுப்பு: ஜூன் 13, 14-ல் தட்கலில் விண்ணப்பிக்கலாம்.


பத்தாம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியிட்டுள்ளது.ஜூன் மற்றும் ஜூலை 2016-யில் நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வெழுத விண்ணப்பிக்க தவறி மாணவர்கள், தட்கல் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஜூன் 13 மற்றும் ஜூன் 14 ஆகிய தேதிகளில் பதிவு செய்து கொள்ளலாம்.மார்ச் 2016 பத்தாம் வகுப்பு தேர்வெழுதியவர்கள் தமது தற்காலிக மதிப்பெண் சான்றிதழின் நகலினையும், தேர்வெழுதாதவர்கள் (Absentees) தமது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டையும் விண்ணப்பத்தினை பதிவு செய்யும் அலுவலரிடம் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணமாக ரூ.125/-ம், சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.500/-ம், ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50/-ம் என மொத்தம் ரூ.675/- வசூலிக்கப்படுகிறது. தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் குறித்து பின்னர் அறிவுக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.