புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவையை வரும் ஞாயிற்றுக்கிழமை விரிவாக்கம் செய்வார் என்று கூறப்படுகிறது. அமைச்சரவை விரிவாக்கத்தில் குறந்த பட்சம் 6 புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்த போதிலும் இந்த விவகாரத்தில் பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், கட்சியின் பிரபலமான முஸ்லீம் தலைவராக காணப்படும் முக்தர் அப்பாஸ் நக்வி, மற்றும்
இளைஞர் பிரிவு தலைவராக உள்ள அனுராங் தாகூர் மேலும், பரிகார் ஆகியோர் அமைச்சரவையில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியான ஆந்திரபிரதேச முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கும் அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
உலக பொருளாதார இந்திய உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு வெளியே வந்த சந்திர பாபு நாயுடு சில நிமிடங்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அமைச்சரவை விரிவாக்கம் குறித்த தகவல்களை இன்னும் இரண்டு நாட்களில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள் என்று தெரிவித்தார். பீகார் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சில புதுமுகங்களுக்கும் சிவசேனா தெலுங்கு தேசம் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.பிக்களும் அமைச்சரவையில் இடம் பிடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை குடியரசுத்தலைவர் மாளிகையில் சந்தித்து பேசினார். அப்போது மந்திரி சபை விரிவாக்கம் குறித்து ஜனாதிபதியுடன், மோடி ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நன்றி, தினதந்தி