Breaking News

இந்த வார அறிவியல் - மின்சாரம் இன்றி ஒளிரும் குழல் விளக்கு

மின்சாரமின்றி எரியும் மின் விளக்கு

tubelight
மின்சாரம் இல்லாமல் குழல் விளக்கை எரிய வைக்க முடியுமா ? (தமிழகத்துக்கு தற்போது மிக அவசியமான ஒன்று ?!)இப்பரிசோதனையின் மூலம் நீங்களே கண்டுபிடியுங்கள்.
தேவையான பொருட்கள்:
  • டியூப் லைட் பல்ப் அல்லது (ஃப்ளோரசன்ட்) அல்லது CFL பல்ப்
  • பலூன்கள்
  • ஒரு இருண்ட அறை
  • முடியுடன் கூடிய ஒரு தலை
StaticElectricityStepOne
செய்முறை:
  1. இருட்டான அறைக்குள் செல்க
  2. ஒரு கையில் பல்ப்பையும் மற்றொரு கையில் ஊதி கட்டிய பலூனையும் எடுத்துக்கொள்ளுங்கள். பலூனை தலையில் முடிந்த வரை அழுத்தி தேய்க்கவும்.
  3. பலூனை டியூப் பல்ப் அருகில் கொண்டு வந்து என்ன நடைபெறுகிறது என்று காண்க
  4. பலூன் டியூப்பை தொடாமல் மேலும் கீழும் அசைக்கவும்.
  5. பலூனை மெதுவாக டியூப் பல்புக்கு மிக  அருகில் ஆனால் ஒட்டாமல் கொண்டு சென்று சிறிய தீப்பொறி ஒன்று வெளிப்படுகிறதா என்று கவனி.
StaticElectricityStepTwo
காரணிகள்: ஒரு எலக்ட்ரான் என்பது ஒரு எதிர்மறை மின்னேற்றம் கொண்ட ஒரு அணுவின் ஒரு துகள் ஆகும். எலக்ட்ரான்கள் ஒரு அணுவின் உட்கருவை சுற்றி வருகின்றன. சுற்றி வரும் (பாயும்) எலக்ட்ரான்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.
எலக்ட்ரான்கள் சுதந்திரமாக ஒரு அணுவில் மற்றொரு அணுவுக்கு தாவக்கூடியவை. அவை ஒரு சில பொருட்களால் அதிகமாக கவர்ந்து இழுக்கப்படுகின்றன. நீங்கள் பலூனை உங்கள் தலையில் தேய்த்த போது உங்கள் முடியில் இருந்த எலெக்ட்ரான்கள் பலூனை நோக்கி தாவின.
குழல் விளக்கு அதாவது ட்யூப் லைட் என்பது அதில் நிரப்ப பட்டு  இருக்கும் பாதரச ஆவியை மின்சார்த்தின் மூலம் தூண்டி ஒளிர வைக்கும் ஒரு விளக்காகும். இதில் மின்சாரத்தின் மூலம் குறுகியஅலை புற ஊதாக்கதிர் உண்டாகிறது. இது பல்பின் உட்புறத்தின் பூசப்பட்டுள்ள பாஸ்பரஸ்ஸால் ஆன வெள்ளை பூச்சின் மீது பட்டு வெளிச்சத்தை உண்டாக்குகிறது. பாஸ்பரஸ்ஸின் மீது  ஒளி அல்லது கதிர்வீச்சு வெளிப்படும் போது ஒளியை விட்டு கொடுக்க பொருட்கள் உள்ளன. பாஸ்பரஸ் என்பது ஒளி அல்லது கதிர்வீச்சை பெற்று வெளிச்சத்தை வெளியிடக்கூடிய ஒரு பொருளாகும். எதிமறை மின்னேற்றம் கொண்ட பலூனை பல்புக்கு அருகில் கொண்டு வரும் போது பாதரச ஆவியில் உள்ள எலெக்ட்ரான்கள் கிளர்ச்சியுறுகின்றன. பல்பை மின்சாரத்துடன் இணைக்கும்போது இதே செயல்தான் நடைபெறுகிறது.
ஒரு ஒளிரும் குழாய் அருகே எதிர்மறையாக விதிக்கப்படும் பலூன் கொண்டு பாதரச ஆவி எலக்ட்ரான்கள் பரவசமடைய இச்செயல் நடைபெறுகிறது.
பாதரசத்தில் உள்ள எலெக்ட்ரான்கள் அதிக சக்தியுள்ள சுற்றுப்பாதைக்கு  நகர்ந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்புபோது புற ஊதக்கதிர் ஆற்றலாக  வெளிப்படுகிறது. அப்புற ஊதாக்கதிகள் பல்பின் உட்புறம் பூசப்பட்டுள்ள பாஸ்பரஸ் வெள்ளைப்பூச்சு மீது பட்டு வெளிச்சமாக வெளிப்படுகிறது. அது தீப்பொறியாக தாவும் போது அதிக ஆற்றல் வெளிப்பட்டு அதிக பிரகாசமான வெளிச்சத்தை தருகிறது