Breaking News

வீட்டிலேயே கற்கண்டு- அறிவியல் சோதனை

அறிவியல் சோதனை
Print E-mail
தேவையான பொருள்கள்
1. கண்ணாடி பாட்டில்
2. பென்சில்
3. நூல்
4. காகித அட்டை
5. 200 கிராம் வெண் சர்க்கரை
6. தண்ணீர்
சுத்தமான கண்ணாடி பாட்டில் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முக்கால் பாகத்திற்கு வெந்நீரை ஊற்றி 200 கிராம் வெண் சர்க்கரையைக் கொட்டி நன்கு கரையும்படிக் கலக்குங்கள். இப்பொழுது பாட்டிலின் முழு பாகத்திற்கும் சர்க்கரைப்பாகு
இருக்கும்படியாக ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
பாட்டிலின் நீளத்திற்கு ஒரு கனமான நூல் ஒன்றைப் பென்சிலின் மய்யப்பகுதியில் கட்டி பாட்டிலுக்குள் இறக்குங்கள். பாட்டிலின் மேலே கனமான அட்டையை வைத்து மூடிவிடுங்கள். இந்த அமைப்பை யாரும் தொடாதபடி எறும்புகள் வராத இடத்தில் மூன்று நாள்களுக்கு வைத்துவிடுங்கள்.
நான்காம் நாள் பாட்டிலுக்குள் கவனித்துப் பாருங்கள். நீங்கள் கட்டிய நூலில் கல்கண்டுக் கட்டிகள் கட்டி கட்டியாகப் படிந்து ஒட்டிக் கொண்டிருக்கும். அப்படியே பென்சிலோடு வெளியே எடுத்து நிழலில் நன்கு உலரவிடுங்கள்.
இனிப்பான கல்கண்டினைச் சுவைத்துப் பாருங்கள்.
ஏன்? எப்படி!
வெண்சர்க்கரைப் பாகில் கண்ணுக்குத் தெரியாத ஒருவித பாக்டீரியாக்களின் வேலையே அது. இது உடம்பிற்குத் தீங்கு ஏதும் விளைவிக்காத பாக்டீரியாக்கள். பாட்டிலின் கண்ணாடி வழுவழுப்பாக உள்ளதால் நூலின் மேல் இனிப்புச் சுவையைப் பாக்டீரியாக்கள் படியச் செய்கின்றன.