முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்த பொங்கல் போனஸ்எப்போது
கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் உள்ளனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்,ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்கருணைத் தொகை வழங்கப்படும் என்று கடந்த 11ம் தேதிஅறிவித்தார். ''3000, 1000, 500 ரூபாய் என மூன்று வகையாகபொங்கல் போனஸ் வழங்கப்படும். இதனால் அரசுக்கு 325 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்'' என்று முதல்வர்ஓ.பன்னீர்செல்வத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுஇருந்தது. பொங்கல் பண்டிகை முடிந்த பிறகும் இன்று வரை அரசுஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல்போனஸ் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச்செயலாளர் ஜனார்த்தனன் கூறுகையில், "அரசு ஊழியர் சங்கமாநில மாநாடு திருவண்ணாமலையில் சமீபத்தில் நடந்தது. இந்தமாநாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு உடனடியாக பொங்கல் போனஸ் வழங்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்பிறகுபொங்கல் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பு போனஸ்தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. மறைந்தமுதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையானஊதியம் மற்றும் சலுகைகள் தமிழக அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால்மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2014-15ம் ஆண்டு முதல்பொங்கல் போனஸாக 7000 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால்தமிழகத்தில் போனஸ் தொகை உயர்த்தப்படவில்லை. மேலும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யப்படும் என்றுஅ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதையும் இதுவரை தமிழக அரசு செய்யவில்லை. எனவே, 7 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சிறப்புகாலமுறை ஊதியம், மதிப்பூதியம், தொகுப்பூதியம் பெறும் 3 லட்சம் அரசு ஊழியர்கள், 5 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்குஉடனடியாக பொங்கல் போனஸ் தொகையை வழங்க தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதுகுறித்து கருவூல வட்டாரத்தில் கேட்ட போது, "தொடர்ந்துஅரசு விடுமுறை விடப்பட்டதால் உடனடியாக பொங்கல் போனஸ்தொகை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வங்கி கணக்கில் வரவுவைக்கப்படவில்லை. விடுமுறை முடிந்தவுடன் பட்டியல்தயாரிக்கப்பட்டு பொங்கல் போனஸ் தொகை வழங்கப்படும். முன்கூட்டியே இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தால்பொங்கல் பண்டிகைக்குள் போனஸ் வழங்கி இருக்கலாம்" என்றனர்.