தமிழக சட்டசபையில் நீட் தேர்வு தொடர்பான மசோதா தாக்கல்
செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவப்படிப்புகளுக்கு நீட்நுழைவுத் தேர்வின்றி, வழக்கமான நடைமுறையில் மாணவர்சேர்க்கை நடத்த, இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த மசோதாவைதாக்கல் செய்துள்ளார். அதன்படி, மாணவர்களுக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தி, நீட் தேர்வில்இருந்து விலக்கு அளிப்பதற்காக இந்த மசோதா தாக்கல்செய்யப்பட்டுள்ளது.