Breaking News

ஏப்ரல் மாத இறுதிக்குள் உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படும் - சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல்




🔵 ஏப்ரல் மாத இறுதிக்குள்தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தலை நடத்த நடவடிக்கைமேற்கோள்ளபட்டுள்ளது எனசென்னை உயர்நீதிமன்றத்தில்மாநில தேர்தல் ஆணையம் தகவல்தெரிவித்துள்ளது.

🔴 உள்ளாட்சித் தேர்தலில் சரியாக இடஒதுக்கீடு பின்பற்றவில்லை என
திமுக வழக்கு தாக்கல் செய்திருந்தது.

🔵 வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வேட்பாளருக்கு இடஒதுக்கீடுபின்பற்றவில்லை எனக் கூறி கடந்த அக்டோபர் மாதம் நடக்கவிருந்தஉள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதித்தது.

🔴 இந்நிலையில் இது தொடர்பான விசாரணை ஐகோர்ட்டில் இன்றுநடைபெற்றது.

🔵 அப்போது தேர்தல் நடத்த எவ்வளவு காலம் தான் தாமதிப்பீர்கள் எனஉயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

🔴 மேலும் 5 வார கால அவகாசம் தேவை என்ற தேர்தல் ஆணையத்தின்கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

🔵 இதேபோல் உள்ளாட்சித் தேர்தல் குறித்து வரும் செவ்வாய்கிழமைவிளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையத்திற்குஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

🔴 தேர்தல் நடத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துதெரிவிக்க வேண்டும் எனவும் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

🔵 இதற்கு பதிலளித்த மாநில தேர்தல் ஆணையம் ஏப்ரல் மாதஇறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தது.


🔴 இந்நிலையில் குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்கள் பட்டியலைவெளியிடுவது சிரமம் என தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில்தெரிவித்துள்ளது.