ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில், ஒரு வாரத்துக்கு தீர்ப்பளிக்கக் கூடாது என்று கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு குறுக்கீடு ஏற்படக் கூடாது என்பதால் மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் முகுல் ரத்தோகி, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த நடவடிக்கை எடுத்து வருவதால், அடுத்த ஒரு வார காலத்துக்கு ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பளிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், ஒரு வார காலத்துக்கு தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.