Breaking News

8000 புதிய ஆசிரியர்கள் இது சாத்தியமா?


நண்பர்களே வணக்கம், ஆசிரியர் தகுதித்தேர்வு 2013 வரை வெற்றி பெற்றவர்களை கொண்டு ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தமிழக அமைச்சர் அறிவித்துள்ளார் இந்த அறிவிப்பு தற்போது எல்லா ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது. தற்போது பல பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருப்பாதாகவும் அதாவது

மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பாதகவும் இதனை கருத்தில் கொண்டு தற்போது கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது இதில் பல பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளதாக தகவல் அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. பல ஆசிரியர்கள் வேறு வேறு இடங்களுக்கு மாற்றபட இருப்பதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருந்த நேரத்தில் தற்போது 8000 பணியிடங்கள் என்றதும் அனைவரும் ஆச்சிரியமாகவும் சந்தோசமாகவும் பார்த்தனர்

ஆனால் இவற்றில் எந்த ஆசிரியர் பணியிடம் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களையும் சேர்த்து பள்ளிக்கல்வித்துறையில் உள்ள காலிபணியிடங்களின் மொத்த தோரய மதிப்பா என்பது மட்டுமே தற்போது கேள்விக்குறி ஆனால் கண்டிப்பாக தற்போது புதிய ஆசிரியர் தகுதித்தேர்வு இல்லை, ஏற்கனவே  தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை கொண்டே இந்த புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் என்பதை அமைச்சரே தெளிவாக விளக்கியுள்ளார் 

எப்படியும் பிப்ரவரி மாதத்துக்குள் இந்த நியமனங்கள் முடிவடையும் என்று எதிர்பார்க்கபடுகிறது. பணியிடங்களின் எண்ணிக்கையை பொறுத்தே இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதா என்பதை பார்க்க வேண்டும் ஆனால் கண்டிப்பாக பணியிடங்கள் நிரப்புவார்கள் அந்த விதத்தில் இந்த அறிவிப்பு  

நுாலிழையில் வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கு வரபிரசாதம் இத்தனை காலம் கழித்து இப்படி ஒரு அறிவிப்பு தமிழக அரசு மற்றும் அமைச்சர் மூலம் கிடைக்கபெற்றதே தற்போது நமக்கு கிடைத்திருக்கும் மகிழ்ச்சி. பல இடங்களில் இருந்து வந்து கொண்டிருக்கும் தகவல் பல பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் இல்லை எனவே பொறுத்திருந்து பார்ப்போம். உண்மையில் 8000 பணியிடங்கள் நிரப்பட்டால் மகிழ்ச்சி.