பொதுத்தேர்வில் மாணவர்களை கண்காணிக்க 155 பறக்கும் படைகளை அமைக்க, திண்டுக்கல் மாவட்ட கல்வித்துறை முடிவு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் நேருஜி நினைவு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நேற்று காலையிலும், மாலையில் பறக்கும் படை குறித்த ஆலோசனைக்கூட்டமும் நடந்தது. கள்ளர் சீரமைப்புத்துறை இணை இயக்குனர் செல்வக்குமார் தலைமை வகித்தார்.
முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். திண்டுக்கல்லில் பிளஸ்2 பொதுத் தேர்வுக்கு 36 மையங்கள், பழநியில் 30 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 66 முதன்மை கண்காணிப்பாளர்கள், 66 துறை அதிகாரிகள் பணியில் ஈடுபட உள்ளனர்.
இதுதவிர 155 பறக்கும் படை குழுக்களில் ஆயிரத்து 122 பேர் பங்கேற்று கண்காணிப்பர். தேர்வு அறைக்குள் மாணவர் கவனம் சிதறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி முதன்மை கண்காணிப்பாளர்களிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது.