Breaking News

இன்ஜினியர்களுக்கு மத்திய அரசுப் பணி!


l
ராணுவம், ரயில்வே, பொதுப் பணித்துறை, புவியியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு துறைப் பிரிவுகளில் அதிகாரியாக பணிபுரிய, பொறியியல் படித்தவர்களுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு இதோ!

குரூப் ’ஏ’ மற்றும் குரூப் ’பி’ பிரிவுகளில், சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகாம் இன்ஜினியரிங் போன்ற துறைகளில் பொறியாளர்களை நியமனம் செய்வதற்கு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) நடத்தும், அகில இந்திய போட்டித் தேர்வு தான், இன்ஜினியரிங் சர்வீசஸ் எக்சாமினேஷன் (இ.எஸ்.இ.,).
காலியிடங்கள்: 602
வயது வரம்பு: 01.01.2016 தேதி நிலவரப்படி 21-30க்குள் இருக்க வேண்டும். ஒ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மற்றும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
பணிப்பிரிவுகள்: இந்தியன் ரயில்வே சர்வீசஸ், சென்டரல் இன்ஜினியரிங் சர்வீஸ், இந்தியன் நேவல் ஆர்மமேன்ட் சர்வீஸ், இந்தியன் ஜியோலஜிக்கல் சர்வே இன்ஜினியரிங், மிலிட்டரி இன்ஜினியரிங் சர்வீஸ், இந்தியன் ரயில்வே ஸ்டோர் சர்வீஸ், இந்தியன் டெலிகாம் சர்வீசஸ், ஜூனியர் டெலிகாம் ஆபிசர், இந்தியன் இன்ஸ்பெக்சன் சர்வீஸ், இந்தியன் சப்ளை சர்வீஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், பணிப்பிரிவுகளுக்கு ஏற்ற பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், நேவல் ஆர்மமேன்ட் சர்வீஸ் மற்றும் ரேடியோ ரெகுலட்டரி சர்வீஸ் பணியிடங்களுக்கு வயர்லஸ் கம்யூனிகேஷன், ரேடியோ பிசிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் ரேடியோ இன்ஜினியரிங் போன்ற ஏதேனும் ஒரு பிரிவில், எம்.எஸ்சி., பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை: எழுத்து, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு: குரூப் ’ஏ’ மற்றும் குரூப் ’பி’ பணியிடங்களில் உள்ள துறைகளுக்கு ஏற்றவாறு, 1,000ம் மதிப்பெண்களுக்கு ‘அப்ஜெக்டிவ்’ முறையிலான தேர்வு மற்றும் ‘கன்வென்ஷன்’ தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: யு.பி.எஸ்.சி., இணையதளம் மூலமாக மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 25.
மேலும் விவரங்களுக்கு: www.upsc.gov.in