Breaking News

+2 கணிதத் தேர்வு கடினம்: சேலம் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை


தமிழகத்தில் நடந்து வரும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணிதத் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததால், முழு மதிப்பெண் பெற முடியாது என்ற விரக்தியில், சேலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி ஒருவர், கணிதப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு படித்து வந்தார்.


ஆனால், நடந்து முடிந்த கணிதத் தேர்வில், கேள்வித் தாள் மிகவும் கடினமாக இருந்ததால், முழு மதிப்பெண் பெற முடியாது என்று அவர் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.

இதையடுத்து, தனது பெற்றோருக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு, வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் அந்த மாணவி.

மாணவி எழுதிய கடிதத்தில், கணிதத்தில் தன்னால் முழு மதிப்பெண் பெற முடியாது என்பதால், தான் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பெற்றோருக்குக் கூறியுள்ளார். இன்று காலை மாணவியின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இவர் பத்தாம் வகுப்புத் தேர்வில் 500க்கு 462 மதிப்பெண்கள் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது