Breaking News

+2 வேதியியல் தேர்வு: தவறான 2 கேள்விகளுக்கு 6 மதிப்பெண்கள் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.


பிளஸ்-2 வேதியியல் தேர்வில் தவறாக கேட்கப்பட்ட 2 கேள்விகளுக்கு பதில் அளிக்க முயற்சி செய்திருந்தால் அந்த மாணவருக்கு கருணை மதிப்பெண் 6 கொடுக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பிளஸ்-2 வேதியியல் தேர்வு கடந்த 14-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் சுற்றி வளைத்து கேட்டதாகவும், கடந்த 10 வருடங்களில் பொதுத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் கேட்கப்படவில்லை என்றும் கூறி மாணவர்கள் ஏராளமானவர்கள் குற்றம் சாட்டியதோடு மிகவும் வருத்ததிற்குள்ளாகினர்.

எனவே, வேதியியல் தேர்வை மீண்டும் நடத்தவேண்டும் என்று பல மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்தனர்.


இதுகுறித்து  பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது:-  பிளஸ்-2 வேதியியல் தேர்வில் ஒரு மதிப்பெண்கேள்வியில் 17-வது வினா சரியாக கேட்கப்படவில்லை. மேலும்5 மதிப்பெண் கேள்வியில் 70-ம் எண் கேள்வி தவறாக கேட்கப்பட்டு இருந்தது. கேள்வியில் 11 என்று இருப்பதற்கு பதிலாக ரோமன் எழுத்தில் கேட்கப்பட்டு இருந்தது. 


ரோமன் எழுத்தில் இரண்டு என்றால் அது கால்சியத்தை குறிக்கும். ரோமன் எழுத்து அல்லாமல் 11 என்றால் அது காப்பரை குறிக்கும். இந்த இரு வினாக்களுக்கும் பதில் அளிக்க முயற்சி செய்திருந்தால்  1 5 மதிப்பெண் வழங்கப்பட உள்ளது. மொத்தத்தில் 6 மதிப்பெண் கருணை அடிப்படையில் வழங்கப்பட இருக்கிறது என்று தெரிவித்தார்.