Breaking News

விக்ஸ் ஆக்‌ஷன் 500 மாத்திரைகள் விற்க தடை.


விக்ஸ் ஆக்‌ஷன் 500 வகை மாத்திரை உட்பட சுமார் 300 வகைமருந்துகளின், உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மத்திய அரசு விதித்துள்ளது. காய்ச்சல் மற்றும் தலைவலிக்கு இந்தியாவில் பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படும் விக்ஸ் ஆக்‌ஷன் 500 மாத்திரைகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளதையடுத்து, அதன் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த மாத்திரையை தயாரிக்க வலி நிவாரணிகள் மற்றும் ஆண்டிபாடிக் உட்பட 344 மருந்துகள் பயன்படுத்தப்படுவதாகவும், ஆனால் இவற்றில் நோயை குணப்படுத்தக்கூடிய சக்தி இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஊறு விளைவிக்கும் மூலப்பொருட்கள் இருப்பதாக கூறி, பி அன்டு ஜி நிறுவன தயாரிப்பான விக்ஸ் ஆக்‌ஷன் 500 வகை மாத்திரை உட்பட சுமார் 300 வகை மருந்துகளின், உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மத்திய அரசு மார்ச் 10 ஆம் தேதி வெளியிட்ட ஒரு அரசாணை மூலம் தடை விதித்திருந்தது.
இதனை எதிர்த்து நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கையை உயர்நீதிமன்றம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், விக்ஸ் ஆக்ஷன் 500 பிளஸ் மருந்து உற்பத்திமற்றும் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடைக்கு மார்ச் 21 ஆம் தேதிவரை இடைக்கால தடை விதித்து தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.